மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழக ஆளுநர் சென்னை வருகை



Apr 17, 2017

ஆர்.கே.நகர் தொகுதிக்கு பணப்பட்டுவாடா நடைபெற்றிருப்பதற்காக ஆதாரத்தோடு செய்திகள் வெளியானதால் ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பணப்பட்டுவாடா தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அச்சோதனையில் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Siragu-vidyasagar-rao

இந்த பணப்பட்டுவாடாவில் முன்னாள் எம்.பி. சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், சமத்துவ மக்கள் கட்சி சரத்குமார், எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோரது வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது.

இந்நிலையில் இன்று(17.04.17) மீண்டும் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் கீதாலட்சுமி ஆகிய இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியது அனால் இன்று அவர்கள் ஆஜராகவில்லை.

மேலும் இரட்டை இலை தங்களுக்கே அளிக்க வேண்டும் என்று கோடிக்கணக்கில் லஞ்சம் வழங்கியதாக டிடிவி தினகரன் பேரில் புகார் எழுந்துள்ளது. இவர் மேல் விசாரணை நடத்துவதற்காக டெல்லி காவல் அதிகாரிகள் சென்னை விரைந்துள்ளனர்.

இந்த சூழலில் தமிழ்நாடு கவர்னர் வித்யாசர் ராவ் இன்று தமிழகம் வந்துள்ளார். தமிழக அரசியல் சூழலில் முக்கிய அறிவிப்புகள் எழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக ஆளுநர் சென்னை வருகை”

அதிகம் படித்தது