மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழக முதல்வர்: தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படும்



Jan 10, 2017

முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் வறட்சி காணப்படுகிறது. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க தமிழகமெங்கும் போராட்டம் நடந்து வருகிறது.

siragu-panneerselvam2

இதன் பிறகு அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிடவேண்டும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று அவற்றின் அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்தார். மேலும் விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரி ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக 100 நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

பயிர்கடனை மத்திய கால கடனாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பயிர்கள் மகசூலில் 100 சதவிகிதம் பாதிப்பு இருந்தால் முப்பதாயிரமும், 80சதவிகிதம் பாதிப்பு இருந்தால் இருபதாயிரமும், 60 சதவிகிதம் பாதிப்பு இருந்தால் பதினைந்தாயிரமும், 33 சதவிகிதம் பாதிப்பு இருந்தால் ரூ.8250 பெற இயலும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஏரிகள் தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக முதல்வர்: தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படும்”

அதிகம் படித்தது