மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழக முதல்வர்: விவசாயிகளுக்கு வங்கிக்கணக்கில் வறட்சி நிவாரணம்



Feb 1, 2017

இன்று(01.02.17) நடைபெற்ற தமிழக சட்டசபை கூட்டத்தில் விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

Siragu-panneerselvam

விவசாயிகளுக்கு அளிக்கப்படும் வறட்சி நிவாரணம், அந்தந்த விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ஒரே தவணையாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் இக்கூட்டத்தில் தமிழகத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் சட்டமுன்வடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரிகளின் பணிக்காலம் ஜூன் 30வரை நீடித்து மசோதா நிறைவேற்றப்பட்டது.

முதல்வர் அறிவிப்புக்குப் பின் தேதி குறிப்பிடாமல் சட்டசபையை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார் சபாநாயகர் தனபால்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக முதல்வர்: விவசாயிகளுக்கு வங்கிக்கணக்கில் வறட்சி நிவாரணம்”

அதிகம் படித்தது