மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

திண்டுக்கல் மாவட்டத்தில் கனிமவளம்: ஆய்வில் மத்திய அரசு, எதிர்ப்பில் மக்கள்



Mar 21, 2017

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கருமலை மற்றும் ரெங்கமலை மலைகளில், காரீயம், துத்தநாகம், செம்பு போன்ற கனிவளம் இருப்பதாகத் தெரிவித்து மத்திய அரசின் நில அறிவியல்துறை அதிகாரிகள் சில மாதங்களாக ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Siragu rengamalai

இந்த ஆய்விற்காக ஆங்காங்கே மூன்றாயிரம் அடிவரை போர்வெல் போடப்பட்டு வருகிறது. இது வேடசந்தூர் சுற்று வட்டாரங்களில் பரவி வருகிறது. எனவே மூன்றாயிரம் அடிவரை போர்வெல் போட்டால் நிலத்தடி நீர் இல்லாமல் போகும் என்று அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இதனையடுத்து வேடசந்தூர் சுற்றுவட்டார மக்கள் மாவட்ட ஆட்சியரிடம், அங்கு நடைபெறும் ஆய்வை எதிர்த்து மனு அளித்துள்ளனர். நெடுவாசல், வடகாடு, நல்லாண்டார்கொல்லம் போன்ற பகுதிகளில் நடத்த போராட்டத்தையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “திண்டுக்கல் மாவட்டத்தில் கனிமவளம்: ஆய்வில் மத்திய அரசு, எதிர்ப்பில் மக்கள்”

அதிகம் படித்தது