மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

திருநெல்வேலி ஆட்சியர்: தாமிரபரணியில் நீர் எடுக்க கோக், பெப்சி நிறுவனங்களுக்கு தடை



Apr 10, 2017

கோக், பெப்சி நிறுவனங்கள் தாமிரபரணியிலிருந்து நீர் எடுப்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் பிரபாகரன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கின் விசாரணையில் கோக், பெப்சி நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்கக்கூடாது என்று உத்தரவிட்டது.

coke pepsi cans

இந்த உத்தரவின்படி சென்ற நவம்பர் 22 லிருந்து கோக், பெப்சி நிறுவனங்களுக்கு நீர் வழங்கப்படவில்லை. நீர் வழங்குவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்த பிரபாகரனுக்கு முன்விரோதம் காரணமாக வழக்கு தொடர்ந்ததாலும், தாமிரபரணி ஆற்றிலிருந்து உபரிநீரைத்தான் எடுக்கிறோம் என்றும் கூறி இவ்வழக்கை தள்ளுபடி செய்யுமாறும் கோக்,பெப்சி நிறுவனங்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கின் விசாரணையில் கோக், பெப்சி நிறுவனங்கள் நீர் எடுத்துக்கொள்வதை அனுமதித்து உத்தரவிட்டது நீதிமன்றம். இதனை எதிர்த்து சமூக இயக்கங்கள், அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தின.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “திருநெல்வேலி ஆட்சியர்: தாமிரபரணியில் நீர் எடுக்க கோக், பெப்சி நிறுவனங்களுக்கு தடை”

அதிகம் படித்தது