தி.மு.க தலைவர் மு.கருணாநிதி ஜூன் 3ல் தனது தொண்டர்களை சந்திக்கிறார்
May 8, 2017
திமுக தலைவர் மு.கருணாநிதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று டிசம்பர் மாதம் வீடு திரும்பினார். எனினும் இதுவரை தொண்டர்கள் யாரையும் அவர் சந்திக்கவில்லை.
இந்நிலையில் அவரது 94வது பிறந்தநாள் வரும் ஜூன் மாதம் 3ம் தேதி சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கவிருக்கிறது. இவ்விழாவில் கருணாநிதி தொண்டர்களை சந்திக்க உள்ளதாக திமுக அமைப்பு செயலாளரும் எம்.பி-யுமான ஆர்.எஸ். பாரதி அறிவித்துள்ளார்.
இதனால் திமுக தொண்டர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். இவ்விழாவில் பீகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள் இவ்விழாவில் பங்குபெறுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. திமுக எம்.பி கனிமொழி பல்வேறு தலைவர்களை நேரில் சந்தித்து கருணாநிதியின் வைரவிழாவில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்து வருகிறார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தி.மு.க தலைவர் மு.கருணாநிதி ஜூன் 3ல் தனது தொண்டர்களை சந்திக்கிறார்”