மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தீபாவின் பேரவையிலிருந்து அவரது கணவர் மாதவன் விலகினார்



Mar 18, 2017

ஜெயலலிதா மறைவிற்குப் பின் அவரது அண்ணன் மகள் தீபா அரசியலில் இறங்கியுள்ளார். பிப்ரவரி 24ம் தேதி எம்.ஜி.ஆர்.-அம்மா- தீபா என்ற பேரவையை தொடங்கினார் தீபா.

Siragu deepa

ஏப்ரல் 12ம் தேதி நடக்கவிருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். இத்தேர்தல் தொடர்பாக நேற்று முன்தினம் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தீபாவுடன் அவரது கணவர் மாதவனும் கலந்து கொண்டார்.

இந்நிலையில் நேற்று இரவு ஜெயலலிதா சமாதியில் வணங்கிய மாதவன், தீபா பேரவையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் தீபா பேரவையில் தீய சக்திகள் இருபதாக குற்றம் சாட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தீபா, கணவரின் நடவடிக்கைகளை யாரும் கண்டுகொள்ள வேண்டாம் என்றும், ஆர்.கே.நகரில் வெற்றி பெறுவது மட்டுமே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு தீபா கூறியுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தீபாவின் பேரவையிலிருந்து அவரது கணவர் மாதவன் விலகினார்”

அதிகம் படித்தது