மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தென்கிழக்கு அரபிக்கடலில் புதிய மேலடுக்கு சுழற்சி: கடலோர தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு



Dec 7, 2016

வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மைய இயக்குனர் ஸ்டெல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

siragu-rain

இதையடுத்து தென்கிழக்கு அரபிக்கடலில் புதிய மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், சென்னை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தென்கிழக்கு அரபிக்கடலில் புதிய மேலடுக்கு சுழற்சி: கடலோர தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு”

அதிகம் படித்தது