மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தேசிய பசுமை தீர்ப்பாயம் மத்திய அரசுக்கு உத்தரவு: சென்னை கடலில் கச்சா எண்ணெய் கலப்புக்கு 24 மணி நேரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும்



Feb 6, 2017

சென்னை எண்ணூர் துறைமுகம் அருகில் இரு கப்பல்கள் மோதியதில் கச்சா எண்ணெய் கடலில் விழுந்தது. இதன் காரணமாக எண்ணூர் முதல் திருவான்மியூர் வரையிலான கடற்பரப்பு எண்ணெய் படலமாக உள்ளது.

Siragu oil

இந்த கச்சா எண்ணெய் கலப்பால் பல்வேறு கடல் உயிரினங்கள் உயிரிழந்தன. இதனால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கடற்பரப்பில் உள்ள எண்ணெயை அகற்றி வருகின்றனர். பத்து நாட்களாகியும் எண்ணெய் கழிவை முழுமையாக நீக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.

இச்சூழலில் சென்னை பசுமை தீர்ப்பாயத்தில் சோமசுந்தரம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். கடலில் ஏற்பட்ட எண்ணெய் கசிவிற்கு விசாரணை நடத்த வேண்டும் என்றும், இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

விசாரணை செய்த பசுமை தீர்ப்பாயம், எண்ணெய் கசிவு குறித்து 24 மணி நேரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தேசிய பசுமை தீர்ப்பாயம் மத்திய அரசுக்கு உத்தரவு: சென்னை கடலில் கச்சா எண்ணெய் கலப்புக்கு 24 மணி நேரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும்”

அதிகம் படித்தது