மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தேர்தல் நடைபெற இருக்கும் மூன்று தொகுதிகளில் தபால் வாக்கு இல்லை



Nov 17, 2016

நவம்பர் 19ல் தமிழகத்தின் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் போன்ற மூன்று தொகுதிகளில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் தபால் வாக்கு இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்துள்ளார்.

siragu-rajesh-lakhoni

இம்மூன்று தொகுதிகளிலும் நடைபெறும் வாக்குப்பதிவு முழுவதும் இணையதள வீடியோ மூலம் பதிவு செய்யப்படும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மைக்ரோ அப்சர்வர்கள் அமர்த்தப்படுவார்கள்.

வாக்களிக்க வரும் வாக்காளர்களின் இடது ஆள்காட்டி விரல்களில் மை இருந்தால் வாக்களிக்க முடியாது. தேர்தல் நடைபெறும் ஒவ்வொரு தொகுதிகளிலும் 13 பறக்கும் படை அமைக்கப்படுவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தேர்தல் நடைபெற இருக்கும் மூன்று தொகுதிகளில் தபால் வாக்கு இல்லை”

அதிகம் படித்தது