மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நடுக்கடலில் தத்தளித்த நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 93 மீனவர்களில் 73 பேர் மீட்பு



Dec 2, 2016

கடந்த 25ம் தேதி நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 93 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். நாடா புயலால் அவர்களுக்கு ஏதாவது நேர்ந்திருக்குமோ என்ற அச்சத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

siragu-fisher-man

இச்சூழலில் காணாமல் போன மீனவர்கள் கோடியக்கரை பகுதியில் நடுக்கடலில் தத்தளித்து வருவதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து கடலோர காவல் படைகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

தேடும் பணியில் 73 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ள 20 மீனவர்களை மீட்க மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நடுக்கடலில் தத்தளித்த நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 93 மீனவர்களில் 73 பேர் மீட்பு”

அதிகம் படித்தது