மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்



Mar 10, 2017

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் போராட்டம் நடைபெற்று வந்தது.

Siragu-neduvasal2

இப்போராட்டத்தில் நெடுவாசல் மக்கள், அருகில் உள்ள கிராம மக்கள், பெண்கள், விவசாய அமைப்பினர் என பலரும் கலந்து கொண்டு போராட்டம் நடத்தி வந்தனர்.

பல்வேறு வடிவங்களில் நடைபெற்ற இப்போராட்டம் 22ம் நாளான நேற்று, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நெடுவாசல் மக்களிடையே பேச்சு வார்த்தை நடத்தினார்.

மக்கள் விருப்பத்திற்கு மாறாக ஹைட்ரோகார்பன் திட்டத்தை அரசு செயல்படுத்தாது என்று மத்திய மாநில அரசுகள் கேட்டுக்கொண்டதையடுத்து இப்போராட்டம் தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்துள்ளனர். இக்கோரிக்கை நிறைவேறாவிட்டால் மீண்டும் போராட்டம் தொடரும் என்று போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்துள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்”

அதிகம் படித்தது