மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பஞ்சாப், கோவாவில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு



Feb 4, 2017

பஞ்சாப், கோவா, உத்தரகண்ட், உத்திரபிரதேசம், மணிப்பூர் போன்ற ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கடந்த மாதம் அறிவித்தார்.

siragu-election

அதன்படி இன்று பஞ்சாப் மற்றும் கோவா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. பஞ்சாப்பில் 8 மணியிலிருந்தும், கோவாவில் 7 மணியிலிருந்தும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பஞ்சாப்பில் உள்ள 117 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஒட்டு பதிவு நடக்கிறது. 40 தொகுதிகள் உள்ள கோவாவிலும் ஒரே கட்டமாக ஓட்டுபதிவு நடைபெறுகிறது. இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ், பா.ஜ.க, ஆம் ஆத்மி உள்ளிட்டோர் தங்களது வேட்பாளர்களை இத்தேர்தலில் நிறுத்தியுள்ளனர்.

கோவா மாநில சட்டசபை தேர்தலில் வாக்களிக்க வரும் பெண்களுக்கு பிங்க் நிற கரடி பொம்மையை பரிசாக வழங்கி வருகிறது கோவா தேர்தல் ஆணையம்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பஞ்சாப், கோவாவில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு”

அதிகம் படித்தது