மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பட்ஜெட்-2017: ரயில்வே துறைக்கு திட்டங்கள்



Feb 1, 2017

இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி.

Siragu india budjet 2017

ரயில்வேயின் வளர்ச்சி, பாதுகாப்பு, சீர்திருத்தங்கள், தூய்மை போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ரயில்வேயின் பாதுகாப்புக்காக ஒரு லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

3500கி.மீ தூரத்திற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும், 500 ரயில் நிலையங்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்படும், 7000 ரயில் நிலையங்களில் சோலார் மின்சார வசதி செய்யப்படும் போன்ற அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.

பணமற்ற டிக்கட் பரிவர்த்தனை 58 லிருந்து 68 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டிய அருண்ஜெட்லி, ரயில்வே இ-டிக்கெட்டுகளுக்கான சேவை கட்டணம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

ஆளில்லா ரயில்வே கேட் இல்லாத நிலையை 2020ஆண்டுக்குள் ஏற்படுத்தப்படும். புதிய மெட்ரோ ரயில் கொள்கை அறிவிக்கப்படும், மேலும் இதற்கான தனிச்சட்டம் விரைவில் இயற்றப்படும் என்றும் நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பட்ஜெட்-2017: ரயில்வே துறைக்கு திட்டங்கள்”

அதிகம் படித்தது