மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பரிசுப் பொருள் வழக்கில் ஜெயலலிதா விடுவிப்பு



Mar 6, 2017

கடந்த 1992ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் வந்தது. முதல்வராக இருப்பவர், தனக்கு வரும் பரிசுப் பொருட்களை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும். ஆனால் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா தனக்கு வந்த பரிசுப்பொருட்களை சொந்த வங்கிக்கணக்கில் வைத்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

siragu-jayalalitha

இது தொடர்பாக ஜெயலலிதா மீதும், அழகு திருநாவுக்கரசர் மற்றும் செங்கோட்டையன் மீதும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து சி.பி.ஐ இவ்வழக்கினை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இன்று(06.03.17) இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கின் விசாரணையில் ஜெயலலிதா மற்றும் அழகு திருநாவுக்கரசர் ஆகியோர் இறந்து விட்டதால் இவர்கள் இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.

மேலும் செங்கோட்டையன் மீதான வழக்கு கோடை விடுமுறைக்குப் பின் விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பரிசுப் பொருள் வழக்கில் ஜெயலலிதா விடுவிப்பு”

அதிகம் படித்தது