மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பழைய ரூபாயை மாற்றுவது 2000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது



Nov 17, 2016

மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தடுக்க, பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றுவதில் 4000 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இது நாளை முதல் நடவடிக்கைக்கு வருகிறது.

siragu-sakthi-kandhadoss

விவசாயிகள் வாரத்திற்கு ரூ. 25 ஆயிரம் வரை எடுத்துக்கொள்ளலாம். மேலும் விவசாயிகள் விளை பொருட்களை விற்கும் பொழுது பெரும் பணத்தை காசோலை மூலம் பெறலாம். விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செலுத்துவதற்கு கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படுகிறது. வேளாண் சந்தை கமிட்டியில் பதிவு செய்தவர்கள் ரூ. 50 ஆயிரம் வரை எடுக்கலாம்.

மேலும் திருமணம் நடக்கவிருக்கிறது எனில், அதற்கான முறையான ஆவணத்தை வங்கியில் கொடுத்து இரண்டரை லட்சம் வரை பெறலாம். பதிவு செய்த வர்த்தகர்கள் வாரத்திற்கு ரூ.50 ஆயிரம் வரை எடுக்கலாம்.

அரசிடம் தேவையான பணம் உள்ளது, மக்கள் பயப்பட்டத் தேவையில்லை, மேலும் மக்களுக்குத் தேவையான பணத்தை அச்சடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பழைய ரூபாயை மாற்றுவது 2000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது”

அதிகம் படித்தது