மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பழைய 500, 1000 ரூபாய் வைத்திருப்பவர்களுக்கு அபராதம்



Feb 4, 2017

கடந்த நவம்பர் 8ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதன் பின் வங்கியில் பணம் எடுக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதனால் பண தட்டுப்பாடு நாடு முழுவதும் ஏற்பட்டது.

siragu-rupees1

புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்கள் மக்களின் புழக்கத்திற்கு விடப்பட்டது. மேலும் மத்திய அரசு, பணமில்லா பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என்றும், அதனை ஊக்குவிக்கும் வகையில் சலுகைகளும் அறிவித்தது.

பழைய 500, 1000ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் செலுத்தும் காலக்கெடு முடிவடைந்த நிலையில், செல்லாத நோட்டுக்களை பத்து எண்ணிக்கைக்கு அதிகமாக வைத்திருப்போர்க்கு பத்தாயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று டிசம்பர் 30ம் தேதி மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. பின் அதனை நிரந்தர சட்டமாக மாற்றி லோக்சபாவில் நேற்று(03.02.17)மசோதா ஒன்றை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி.

மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை 10எண்ணிக்கைக்கு அதிகமாக வைத்திருப்போருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் அல்லது நோட்டுகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் ஐந்து மடங்கு என்று கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த இரண்டில் எது அதிக தொகை வருகிறதோ அதுவே அபராதமாக விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி, படிப்பு போன்றவற்றுக்காக 25 எண்ணிக்கையில் வைத்திருக்க அம்மசொதாவில் அனுமதியளித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பழைய 500, 1000 ரூபாய் வைத்திருப்பவர்களுக்கு அபராதம்”

அதிகம் படித்தது