மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது



Nov 18, 2016

3 வது நாளாக நடைபெறும் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று 10 மணிக்கு துவங்கியது. ரூபாய் நோட்டு விவகாரம் பற்றி இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டது.

siragu-parliament

ராஜ்யசபாவில் ரூபாய் நோட்டு விவகாரம் பற்றி பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது.

லோக்சபாவிலும் ரூபாய் நோட்டு விவகாரம் பற்றி விவாதிக்கவேண்டும் என்று எதிர்கட்சிகள் கூச்சலிட்டனர். அதனால் லோக்சபா 12 மணி நேரம் வரை ஒதுக்கப்பட்டது. மீண்டும் 12 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டும் எதிர்கட்சி எம்.பி.கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் லோக்சபா வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது”

அதிகம் படித்தது