மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பிரசவ காலத்திற்காக 26 வாரங்கள் விடுமுறை



Mar 10, 2017

பிரசவ காலத்திற்காக 12 வாரங்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. இதில் அரசு, தனியார் மற்றும் பொதுத்துறையின் கீழ் பணியாற்றும் பெண்கள், தங்கள் முதல் இரண்டு குழந்தைகளின் பிரசவ காலத்திற்கு விடுமுறை அளித்துள்ளது.

KPN photo

இச்சட்டத்தின் கீழ் கொண்டுவந்துள்ள பிரசவகால விடுப்பை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. கடந்த நவம்பர் மாதம், 12 வாரமாக இருந்த பிரசவகால விடுப்பு 26 வாரங்களாக மாற்றியமைத்து பாராளுமன்றத்தின் கூட்டத்தொடரின் ராஜ்யசபாவில் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

நேற்று நடைபெற்ற லோக்சபா கூட்டத்தொடரில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களுக்குப் பொருந்தும். இதன் மூலம் 18 லட்சம் பெண் தொழிலாளர்கள் பயன் பெறுவர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பிரசவ காலத்திற்காக 26 வாரங்கள் விடுமுறை”

அதிகம் படித்தது