மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பிரதமர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் நிர்வாணப் போராட்டம்



Apr 10, 2017

தேசிய வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 28 நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Siragu-farmers

போராடும் தமிழக விவசாயிகள் ஒவ்வொரு நாளும் பல்வேறு வடிவங்களில் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று(10.04.17)பிரதமர் அலுவலகத்தில் மனு அளித்த விவசாயிகள் தொடர்ந்து நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் அலுவலகத்திலிருந்து நாடாளுமன்றத்தை நோக்கி சென்று அங்கு கீழே விழுந்து உருண்டு நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏழு விவசாயிகளை கைது செய்தது டெல்லி போலிஸ்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பிரதமர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் நிர்வாணப் போராட்டம்”

அதிகம் படித்தது