மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பிளாஸ்டிக் குப்பைகளுக்குத் தடை: டில்லியில் ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது



Dec 3, 2016

டில்லியில் தீபாவளி பண்டிகைக்குப் பின் கடந்த ஒரு வார காலமாக காற்றில் மாசு காணப்படுவதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் குழந்தைகள் மற்றும் வயதானோரும் மூச்சு விட சிரமப்படுதல் மற்றும் கண் எரிச்சல் போன்றவற்றால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

siragu-plastic

இதனால் பகல் வேளையிலும் மக்கள் நடமாட்டம் குறைவாகவே உள்ளது. கடந்த 17 ஆண்டுகளுக்கு இல்லாத அளவிற்கு மாசு காற்றுடன் கலந்துள்ளது. இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த தேசிய தீர்ப்பாய தலைவர் ஸ்வதண்டெர் குமார் தலைமையிலான அமர்வு, டில்லி மற்றும் அதை ஒட்டி இருக்கக்கூடிய புறநகர் பகுதிகளில் வெளியேற்றக்கூடிய பிளாஸ்டிக் குப்பைகளுக்கு தடை விதித்து உத்தவரவிட்டுள்ளது. இத்தடை வரும் ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பிளாஸ்டிக் குப்பைகளுக்குத் தடை: டில்லியில் ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது”

அதிகம் படித்தது