மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பி.எச். பாண்டியன் பேச்சை மறுத்து பண்ருட்டி ராமச்சந்திரன் பதில்



Feb 7, 2017

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் குறித்து இன்று காலை பி.எச்.பாண்டியன் செய்தியாளர்களுக்கு விளக்கிக் கூறினார். இதனையடுத்து அதிமுக-வின் மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் செங்கோட்டையன் ஆகிய இருவரும் அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

Siragu panrutti raamachandran

ஜெயலலிதா மறைவிற்குப் பின் அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்கக் கூறினோம், அதனை அவர் ஏற்றுக்கொண்டார். மேலும் தற்போது முதல்வர் பதவியை ஏற்குமாறு கூறினோம், அதற்கும் ஒப்புதல் அளித்தார். அதிமுக ஒற்றுமையுடனும், அமைதியாகவும் உள்ளது. இதனை கெடுக்கும் வகையில் சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் பி.எச்.பாண்டியன் அளித்த பெட்டிக்கு பதில் அளிக்குமாறு கூறியுள்ளார்.

அதிமுக-க்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடாதவர், ஜெ., மீது வழக்கு தொடர காரணமாக இருந்தவர் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பி.எச். பாண்டியன் பேச்சை மறுத்து பண்ருட்டி ராமச்சந்திரன் பதில்”

அதிகம் படித்தது