மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

புதியதாக 50 சோலார் பூங்கா நாடு முழுவதும் அமைக்க மத்திய அரசு அனுமதி



Feb 22, 2017

பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை பிரதமர் மோடி தலைமையில் இன்று(22.02.17) நடைபெற்றது. இதில் நாட்டின் சோலார் உற்பத்தியின் கொள்ளளவை இருபதாயிரம் மெகாவாட்டிலிருந்து நாற்பதாயிரம் மெகாவாட்டாக அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டது.

Siragu solar

எனவே நாடு முழுவதும் புதியதாக 500 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 50 சோலார் பூங்காக்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

2020ம் ஆண்டிற்குள் ரூ.8100 கோடி ரூபாயில் சோலார் பூங்காக்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது மத்திய அரசு. புதியதாக அமைக்கப்பட உள்ள சோலார் பூங்காங்கள் மூலம் வருடத்திற்கு 64 பில்லியன் மெகாவாட் மின்உற்பத்தி செய்ய முடியும் என்று மத்திய மின்துறை அமைச்சர் பியூஸ் கோயல் விளக்கினார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “புதியதாக 50 சோலார் பூங்கா நாடு முழுவதும் அமைக்க மத்திய அரசு அனுமதி”

அதிகம் படித்தது