மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பூமியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட ரிசோர்சாட் 2ஏ செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது



Dec 7, 2016

ஸ்ரீஹரிகோட்டா சதீஸ்தவான் வெண்வெளி தளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி சி 36 ராக்கெட் மூலம் ரிசோர்சாட் 2ஏ என்ற செயற்கைக்கோள் இன்று (07.12.2016) காலை 10.25 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது.

siragu-satellite

இந்த செயற்கைக்கோள் இஸ்ரோவின் 38 வது செயற்கைக்கோள். இந்த செயற்கைக்கோளின் மொத்த எடை 1.2 டன் ஆகும். விண்ணில் செலுத்தப்பட்ட 18வது நிமிடத்தில் இந்த செயற்கைக்கோள் அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

கடந்த 2003ம் ஆண்டு ரிசோர்சாட் -1 என்ற செயற்கைக்கோளையும், 2011ம் ஆண்டு ரிசோர்சாட் -2என்ற செயற்கைக்கோளையும் இஸ்ரோ விண்ணில் ஏவியது. அதன் தொடர்ச்சியாக ரிசோர்சாட் 2ஏ என்ற செயற்கைக்கோள் தொலை உணர்வுக்காக மற்றும் பூமியை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவதற்காக அனுப்பப்பட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பூமியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட ரிசோர்சாட் 2ஏ செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது”

அதிகம் படித்தது