மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பெண்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு திமுக மகளிரணி பேரணி



Mar 20, 2017

நாடாளுமன்றத்தில்பெண்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு திமுக மகளிரணி டில்லி மண்டி ஹவுஸ் பகுதியில் இருந்து ஜந்தர் மந்தர் வரை பேரணி நடத்தினர். இப்பேரணிக்கு திமுக மகளிரணி செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழி தலைமை தாங்கினார்.Siragu kanimozhi

நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடுக்கு வழி வகை செய்யும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு உள்ள நிலையில் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது.

2010ம் ஆண்டு இந்த சட்டம் ராஜ்ய சபாவில் நிறைவேற்றியது. ஆனால் லோக்சபாவில் நிறைவேற்றாமல் உள்ளது. எனவே பெண்கள் இடஒதுக்கீடு காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து இப்பேரணி நடத்தப்பட்டது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பெண்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு திமுக மகளிரணி பேரணி”

அதிகம் படித்தது