மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை வழக்கின் சீராய்வு மனு தள்ளுபடி



Feb 7, 2017

பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகிய ஏழு நபர்கள் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

Siragu perarivalan2

இவ்வழக்கில் கைதான ஏழுபேரின் விடுதலை செய்வது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதனால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு ஒன்றை கடந்த ஆண்டு தாக்கல் செய்துள்ளது.

மத்திய அரசின் ஆலோசனை பெறலாமே தவிர, அனுமதி பெற தேவையில்லை என்று தமிழக அரசு அளித்த மனுவில் இவ்வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை தள்ளுபடி செய்துள்ளது உச்சநீதிமன்றம்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை வழக்கின் சீராய்வு மனு தள்ளுபடி”

அதிகம் படித்தது