மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

போராடும் தமிழக விவசாயிகளின் பிரச்சனையைத் தீர்க்கக்கோரி சென்னையில் ரிசர்வ் வங்கி முற்றுகை



Mar 27, 2017

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயிர்கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மாந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் 14 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Siragu-tamizhaga-vazhvurimai-katchi

இந்தப் போராட்டம் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பல்வேறு வடிவங்களில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று(27.03.17) விவசாயிகளின் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்று சென்னை ரிசர்வ் வங்கியை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மகளிர் பாசறை சார்பில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. காலை 11.30 மணிக்கு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டார்.

டெல்லியில் நடைபெறும் தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். 




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “போராடும் தமிழக விவசாயிகளின் பிரச்சனையைத் தீர்க்கக்கோரி சென்னையில் ரிசர்வ் வங்கி முற்றுகை”

அதிகம் படித்தது