மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மணியங்குடி திருக்கோயில் வரலாறு – பகுதி – 2

பா. கார்த்திக்

Oct 8, 2022

siragu maniyangudi1கருப்பசாமி பற்றிய பாடல்கள்

தற்காலத்தில் கருப்பசாமி பற்றிய பாடல்கள் பல எழுந்துள்ளன. பாடுவார் முத்தப்ப செட்டியார் கருப்ப குளுவ நாடகம் என்ற ஓன்றை எழுதியுள்ளார். இது  தவிர பல பாடல்கள் கருப்பசாமி பற்றித் தற்போது கிடைக்கின்றன. அவற்றுள் சில் இங்கு பதிவு செய்யப்படுகின்றன.

பாடல் -1 சிவகங்கை மாவட்டம் கொரட்டி என்ற ஊரில் அமைந்துள்ள கருப்பர் குறித்த பாடல்.

வந்தான் கருப்பன் விளையாட

வாளில் ஏறி நினறாட

வந்தான் கருப்பன் விளையாட

வாளில் ஏறி நினறாட (வந்தான்)

வாளும் வேலும் விளையாட

வாளில் ஏறி நின்றாட

சுக்கு மாந்தடி சுழன்றாட

வந்தான் கருப்பன் விளையாட (வந்தான்)

காலில் சலங்கை கலகலக்க

கையில் வாளும் பளபளக்க

முறுக்கு மீசை துடி துடிக்க

வந்தான் கருப்பன் விளையாட (வந்தான்)

பாலும் சோறும் கமகமக்க

பள்ளையம் இங்கே ஜொலி ஜொலிக்க

பிள்ளைகள் நாங்கள் கொண்டாட

வந்தான் கருப்பன் விளையாட (வந்தான்)

சந்தனக் கருப்பன் தானாட

சங்கிலிக் கருப்பன் உடனாட

பதினெட்டாம் படி கருப்பனுமே

வந்தான் கருப்பன் விளையாட (வந்தான்)

முன்னோடியுமே ஓடிவர

நொண்டியும் இங்கே ஆடிவார

பதினெட்டாம் படி கருப்பனுமே

வந்தான் கருப்பன் விளையாட (வந்தான்)

கொரட்டி எனும் ஓர் ஆலயமாம்

கூடி இருப்பவன் சாஸ்தாவாம்

தங்கையும் அங்கே அருகிருக்க

தரணியை காக்க வந்தவனாம் (வந்தான்)

என்பது ஒரு பாடலாக உள்ளது.

மந்திக் கருப்பர் வருகைப் பதிகம்

விநாயகர் வணக்கம்

வந்தித்துப் போற்றி வணங்கித் தொழுவோர்க்கு

முந்தி அருள்கொடுக்க முகமலரும் கணபதியே !

மந்தார வனம்காக்கும் மந்திக் கருப்பரையாம்

செந்தமிழால் வரவேற்கத் திருவருளைத் தாருமய்யா

இதில் கருப்பரின் துணைத் தெய்வங்களாக மற்ற கருப்பர்கள் இருப்பதை உணரமுடிகின்றது.

கவிஞர் அர. சிங்கார வடிவேலன் என்பவர் மந்திக் கருப்பர் மீது ஒரு பதிகம் பாடியுள்ளார். இப்பாடல்கள் பதினாறு என்ற அளவில் அமைந்துள்ளது.

பதிகம்

மந்திக் கருப்பா ! மாகாள தேவா !

பைந்தமிழால் மாலைகட்டிப் பதமலரில் சு10ட்டுகிறோம்

சிந்தனையைத் தெளிவாக்கிச் செய்கையிணை அறமாக்க

வந்தனைகள் கூறுகிறோம் வருவாய் இதுசமயம் (1)

மழையறியாச் சீமையிலே மலைபோல் வீற்றிருந்து

பிழைபொறுத்துக் காப்பாற்றும் பெரிய கருப்பண்ணனே !

தலைமேலே பூச்சுமந்து தளிரடியிற் சு10ட்டுகிறோம்

அழையாமல் ஓடிவந்தே அருள்வாய் இதுசமயம் (2)

நாயகியாள் உடனாய நயினாரின் சந்நிதியில்

வாயில் திசைநோக்கி வலப்புறத்து மேடையிலே

தூயவுருக் காட்டாமல் சுடர்வாளின் வடிவான

தாயகமே ! கருப்பண்ணனே! தாவிவர வேணுமய்யா (3)

பாதமலர்த் தாமரையும் பக்கத்தில் வாளிரண்டும்

காதங்கள் சென்றடையும் கந்தவடி நறுமணமும்

ஏதமிலாத் திருமுடியில் எலுமிச்சைப் பழச்சுவையும்

ஆதரவாய் காட்டி அருகில்வர வேணுமய்யா (4)

கோட்டூர் கருப்பண்ணனே! கொண்டு வந்த பன்னீரை

ஆட்டி மகிழுகையில் ஆவி உருகுதய்யா

பாட்டாலே தெண்டனிட்டுப் பணிவாக வணங்குகிறோம்

கேட்டவரம் தந்தருளக் கிட்டவர வேண்டுமய்யா (5)

இத்திராணி காவலனே ! எங்கள் குடிகாக்க

மந்தார வனம் நோக்கி வந்திருக்கும் நாயகமே

கந்தவடி நறுமணத்தைக் காதலிக்கும் கருப்பண்ணனே

வந்தபயன் ஈடேற வருவாய் இதுசமயம் (6)

எலுமிச்சைக் கனிகளினை ஏற்றருளும் பெருந்தேவே!

எழுமிச்சை தனையடக்கி எமைக்காக்க வேண்டுமெனச்

குழுமிச்செய் பணிகளெலாம் கோபுரத்தில் விளக்காக

எலுமிச்சை போலுருண்டே எழுவாய் இதுசமயம் (7)

நாட்டில் மழைபொழிய நற்பணிகள் தொடர்ந்துவர

வீட்டில் அறம்வளர விளைவயல்கள் பொன்கொழிக்கக்

கோட்டையிலே கொடிபறக்கக் கோட்டூரின் புகழ்வளரச்

சாட்டை சொடுக்கிச் சதிராட வேண்டுமய்யா (8)

கன்னியர்கள் மாலைபெறக் காளையர்கள் வேலைபெறக்

கண்ணியமே வெற்றிபெறக் கடவுள் பணிதொடரப்

புண்ணியமே வயல்களிலே புதுப்பயிராய் விளைந்துவரக்

கண்ணான கருப்பண்ணனே ! கடுகிவர வேண்டுமய்யா! (9)

நல்லவர்க்கும் அல்லவர்க்கும் நடுவான நாயகமே!

வல்லவர்க்கும் எளியவர்க்கும் வாழ்வளிக்கும் தாயகமே

எல்லோரும் வாழ இதயமலர் தூவுகிறோம்

வல்லவனே! கருப்பையா ! வந்தருள வேண்டுமய்யா! (10)

எதுசமயம் என்றே எவரும் அறியாமல்

மதுவெறிதான் தலைக்கேறி மதம்பிடிக்கும் நேரத்தில்

பொதுவாக வீற்றிருந்து புத்தியிலே சு10டாற்றி

எதுசமயம் எனக்காட்ட எழுவாய் இதுசமயம் (11)

நாயகியாள் சௌந்தரமும் நாயகரைப் பார்த்திருப்பாள்

நாயகமாம் நயினாரும் நம்பிள்ளை எனப்பொறுப்பார்

தீயவரைச் சாட்டையினால் திருத்துவதும் உன் பொறுப்பே

தூயவனே ! ஆதலினால் தோன்றிடுவாய் இதுசமயம் (12)

பள்ளியிலே பிள்ளைகளைப் பாடத்தில் செலுத்திடுவாய்

கள்ளியிலும் முல்லைமணம் கமகமக்கச் செய்யதிடுவாய்

அள்ளியிடும் பெருமனத்தை அனைவர்க்கும் வழங்கிடுவாய்

துள்ளிவரும் பரியேறித் தோன்றிடுவாய் இதுசமயம் (13)

பாருக்கு நலம்கொடுக்கும் பரந்தாமன் திருவடிவே !

சீருக்கச் சீர்மணக்கும் செந்தமிழன் காதலனே !

பாருக்கே வாழ்வளிக்கப் பணிவாக வேண்டுகிறோம்

காருக்கும் கைகொடுத்துக் காத்தருள வேண்டுமய்யா (14)

மங்கலங்கள் பொங்கிவர மனைகாக்கும் கருப்பண்ணனே!

வங்காளக் கடல்போல வளம் கொடுக்கும் தாயகமே!

சிங்காரத் தமிழாலே திருவடியைப் போற்றுகிறோம்

இங்கின்றே அருள்பொழிய எழுவாய் இதுசமயம் (15)

பாகப்பெண் சௌந்தரமாம் பரமசிவன் நயினாராம்

தாகத்தை தீர்த்தருளும் தளபதியே ! கருப்பண்ணனே!

ஏகப்பன் உன்பிள்ளை இயற்றுகிற பணியேற்க

வேகப்பன் பாட்டேற்று விரைந்திடுவாய் இதுசமயம் (16)

இவ்வாறு கருப்பர் பற்றிப் பல பாடல்கள் பல சிற்றிலக்கியங்கள் அமைந்துள்ன. நாட்டுப்புற மக்களும் கருப்பர் பற்றிய பாடல்கள் பலவற்றை இயற்றியுள்ளனர். தமிழகத்தில் மிகப் பலராலும் போற்றப்படும் பாடல் பின்வருமாறு.

‘அங்கே இடி முழங்குது – கருப்பசாமி

தங்க கலசம் மின்னுது

அங்கே இடி முழங்குது – கருப்பசாமி

தங்க கலசம் மின்னுது

அங்கே இடி முழங்குது – மகாலிங்கம்

மாளிக பாறை கருப்பசாமி தங்க கலசம் மின்னுது

வெள்ள நல்ல குதிர மேலே

வீச்சருவா கையிலேந்தி

வேட்டையாட வாரார் அங்கே கோட்ட கருப்பசாமி

அங்கே இடி முழங்குது – கருப்பசாமி

தங்க கலசம் மின்னுது

மலையாம் மலையழகாம் மாமரங்கள் உண்டுபண்ணி…..

மலையாம் மலையழகாம் மாமரங்கள் உண்டுபண்ணி…..

சிலையாக நிக்கிறாரே தெய்வமான கருப்பசாமி

அங்கே இடி முழங்குது – கருப்பசாமி

தங்க கலசம் மின்னுது

கருத்த முத்து எண்ணெ போல வடிவழகன் கருப்பசாமி….

கருத்த முத்து எண்ணெ போல வடிவழகன் கருப்பசாமி….

செவத்த துண்டு தலையில் கட்டி தேடி வேட்டை யாடி வாரார். (2)

அங்கே இடி முழங்குது – கருப்பசாமி

தங்க கலசம் மின்னுது

தண்டை கையிலேந்தி ஆடி வாரான் கருப்பன்

அருவா மேலே நின்னு ஆடி வாரான் கருப்பன்

தண்டை கையிலேந்தி ஆடி வாரான் கருப்பன்

அருவா மேலே நின்னு ஆடி வாரான் கருப்பன்

கோன நல்ல கொண்ட போட்டு

கோத்த முத்து பல்லழகன்….

கோன நல்ல கொண்ட போட்டு கோத்த முத்து பல்லழகன்

கொடிய வேட்டை யாடியல்லோ வாரார் அங்கே கருப்பசாமி…

அங்கே இடி முழங்குது – கருப்பசாமி

தங்க கலசம் மின்னுது

அங்கே இடி முழங்குது – கருப்பசாமி

தங்க கலசம் மின்னுது’

என்று இப்பாடலில் கருப்பசாமியின் வீரமும், புகழும் பாடப் பெற்றுள்ளன. இப்பாடலில் இடம்பெறும் மாளிகைப் பாறை கருப்பசாமி என்ற தெய்வம் தென்மாவட்டங்களில் மிகப் புகழ் பெற்ற தெய்வமாகும். இத்தெய்வத்தின் சாயலில்தான் மணியங்குடி ஆலயம் நிர்மாணிக்கப் பெற்றுள்ளது. எனவே இக்கருப்பர் பற்றிய செய்திகள் இனி இவ்வாய்வில் காட்டப்பெறுகின்றன.

மாளிகைப்பாறை கருப்பசாமி வரலாறு

தேனி மாவட்த்தில் வருசநாட்டுப் பகுதியில் உப்புத்துறையின் அருகில், கடமலைக்குண்டுக்கு அருகில் உள்ள ஊர் மாளிகைப் பாறை ஆகும். இங்குப் பாண்டி ப10சாரி என்பவர் கருப்பசாமி கோயில் ஒன்றை உருவாக்கினார். ஆடி அமாவாசை அன்று மிகச் சிறப்பாக கருப்பசாமிக்கு வழிபாடு நடத்தி அவர்கள் அரிவாள் மீது ஏறி நின்று நற்குறி உரைத்தார். இக்குறிகள் பலித்ததால் மக்கள் பலரும் அ;;ந்த இடத்திற்கு வருகை தந்து கருப்பசாமி அருள் பெற்றுச் சென்றனர்

இங்கு  ஆடு, கோழி, போன்றன பலியிடப்பெற்று ப10சை நடத்தப்படுகிறது. மேலும் கருப்பசாமிக்கு மிகவும் பிடித்தமான மது பானங்கள் வைத்துப் படைக்கப்படுகிறது.

தற்போது பாண்டி பூசாரியின் மகன்கள் தனித்தனியாக கருப்பசாமி கோயில்களை அமைத்து வழிபாடு நிகழ்த்தி குறி சொல்லி வருகின்றனர். இவர்களை ஒட்டி, இவர்களின்  வழிபாட்டை முன்வைத்துப் பல ஊர்களில் தற்போது கருப்பசாமி வழிபாடு நிகழ்த்தப்பெற்று வருகிறது. அங்கங்கு உள்ள ப10சாரிகள் பாண்டி பூசாரியை முன்வைத்துக் குறி சொல்லி வருகின்றனர்.

மேற்சுட்டப்பெற்ற பாண்டி பூசாரியோடு அவரின் வழிபாடுகளில் கலந்து கொண்டவராக மணியங்குடியில் கருப்பசாமி கோயில் அமைத்துள்ள தில்லையப்பன் என்ற பாண்டி பூசாரி  விளங்கினார்.  மாளிகைப் பாறையில் சில காலம் இருந்த அவர் தற்போது மணியங்குடியில் அருள்மிகு கருப்பசாமி கோயிலைக் கட்டியும் , நிர்வகித்தும் , வழிபாடு செய்தும் , குறி சொல்லியும் வருகிறார்.

மணியங்குடி தில்லையப்பன் என்ற பாண்டி பூசாரி

தில்லையப்பன் என்ற பாண்டி பூசாரியே மணியஙகுடியில் கருப்பசாமி கோயிலை அமைத்தவர் ஆவார். இவர் இளம் வயது முதலே ஆன்மீக நாட்டம் உடையவராக விளங்கினார்

இவரின் பன்னிரண்டாம் வயதில் இவர் சிலருக்கு நற்குறி சொல்ல அவை யாவும் நடந்தன. இந்நிலையில் இவர் பதினான்காம் வயதில் மாளிகைப் பாறை சென்று அங்குள்ள கருப்பசாமி வழிபாட்டில் கலந்து கொண்டார்.  சில மாதங்கள் அங்கேயே தங்கினார். மேலும் அங்குப் பூசைப் பணியில் இருந்த பாண்டி ப10சாரியின் தொண்டராகவும் இவர் விளங்கினார்.

அப்போது அங்கு இருந்த பாண்டிபூசாரி இவரிடத்தில் இருக்கும் அருள் சக்தியை அறிந்து இவருக்கு அதனை உணர்த்தினார். மேலும் ஒரு வழிபாட்டுப்பொருளைத் தந்து கிழக்குப் பக்கம் சென்று கருப்பருக்குக் கோயில் அமைத்து வழிபாடு செய் என்று கூறினார்.

இதனை அப்படியே ஏற்று மணியங்குடிக்கு வந்த தில்லையப்பன் ஒரு கோயிலை அங்கு நிர்மாணிக்க எண்ணினார். இரண்டாயிரத்து மூன்றாம்ஆண்டு தில்லையப்பன் கருப்பருக்கு ஒரு கோயிலை அங்கு எழுப்பி அது முதல் கோயில் நிர்வாகத்தையும், வழிபாட்டையும், குறி சொல்லுவதையும் நடைமுறையாகக் கொண்டு அவ்வ10ருக்கும் அவ்வ10ர் சார்ந்த மக்களுக்கும் வழிகாட்டி வருகிறார்.

இவர்      மணியங்குடி அருகே உள்ள மரகாத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர்  பொறுப்பிலும் இருந்துள்ளார். இவர் தன் தலைவராக உள்ள கிராமத்திற்கு புதிய சாலை வசதியை ஏற்பாடு செய்து தந்துள்ளார். அங்கன்வாடி நிறுவனத்தை இவ்வ10ரில் அமைக்க உதவியுள்ளார்.தான் பொறுப்பேற்றுள்ள கிராமத்திற்குக் காலை, மாலை, இரவு மூன்று நேரம் அரசு பேருந்து வந்து செல்லும் வசதி செய்து தந்து உள்ளார்.

மேலும் குடிநீர் வசதி , தெரு விளக்கு வசதி, கிராமப்புறத் தோட்ட வசதி போன்றவற்றையும் ஏற்படுத்தித் தந்துள்ளார். இதுபோன்ற கிராமத்திற்கான அடிப்படை வசதிகளையும், அதேநேரத்தில் ஆன்மிக வழிகாட்டலையும் செய்துவருகிறார்.

  •    பாண்டி பூசாரி நல்வாக்கு சொல்லுரது மட்டுமல்லாமல் தன்னை நாடி வரும் பக்தர்களுக்குத் தேவையான மருந்துகளை தானே தயார் செய்து அவர்களின் பிணி போக்கும் பணியிலும் சிறந்துவிளங்கி வருகிறார். இவர் மருந்து தயாரிக்கும் முறையை முறையாக சதுரகிரியில் இருந்த சித்தரிடம் கற்றுகொண்டுள்ளார். இவர்..
  • தேள் கடி மீட்சிக்கான மருந்து
  •  பாம்பு கடி மீட்சிக்கான மருந்து
  •  பூரான் கடி மீட்சிக்கான மருந்து

விஷம் குடித்தவர்களுக்கு அவ்விஷத்தை முறிக்கும் மருந்து போன்றவற்றைத் தயாரித்துத் தருபவராகவும், அவற்றைத் தீர்க்கும் வைத்தியராகவும் விளங்கி வருகிறார்.

இவ்வாறு மணியங்குடியில் அமைந்துள்ள அருள்மிகு வாழ்வளிக்கும் கருப்பசாமி திருக்கோயில் தோன்றிய வரலாறு குறித்தான செய்திகளை அறிந்து கொள்ளமுடிகின்றது.

முடிவுகள்

இந்தக் கலியுகத்தில் மக்களைத் தீமையில் இருந்து காக்கும் தெய்வமாக கருப்பசாமி தெய்வம் விளங்குகிறது.

மணியங்குடியில் தில்லையப்பன் என்ற பாண்டி பூசாரியின் முயற்சியால் அருள்மிகு வாழ்வளிக்கும் கருப்பசாமி திருக்கோயில் கட்டப்பெற்றுள்ளது.

தில்லையப்பன் என்பவர் இளமையில் ஆன்மீக நாட்டம் பெற்றவராக விளங்கினார். இவர்  தன் வளர் பருவத்தில் மாளிகைப் பாறை என்ற ஊரில் அருள்மிகு கருப்பசாமிக்குக் கோயில் ஏற்படுத்தி வணங்கிக் குறி சொல்லி வந்த பாண்டி ப10சாரி என்பவரைக் குருவாகக் கொண்டு பணி செய்து கருப்பர்  அருள் கைவரப்பெற்றார். இதன் காரணமாக அவரின் கட்டளைப்படி மணியங்குடி என்ற தன் கிராமத்திற்கு அருகில் உள்ள இடத்தில் கருப்பசாமிக்குக் கோயில் கட்டி, அருள்மிகு வாழ்வளிக்கும் கருப்பசாமி என்று பெயர் வைத்து வணங்கிவருகிறார்.

இக்கோயில் இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டு கட்டப்பெற்றுள்ளது. இக்கோயிலில் மக்கள் பெரு நம்பிக்கையுடன் வணங்கி வருகின்றனர்.


பா. கார்த்திக்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மணியங்குடி திருக்கோயில் வரலாறு – பகுதி – 2”

அதிகம் படித்தது