மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மண் சோறு சாப்பிட்டு விவசாயிகள் போராட்டம்



Apr 11, 2017

பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Siragu farmer

எலிக்கறி தின்றும், பாம்புக்கறி தின்றும் தங்களது போராட்டத்தை பல்வேறு வடிவங்களில் செயல்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று விவசாயிகள் பிரதமர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் விவசாயிகள். அப்போது ஏழு விவசாயிகளை கைது செய்தது டெல்லி போலிஸ்.

அவ்வகையில் போராட்டத்தின் 29-வது நாளான இன்று(10.04.17) மண் சோறு சாப்பிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மண் சோறு சாப்பிட்டு விவசாயிகள் போராட்டம்”

அதிகம் படித்தது