மதுக்கடையை எதிர்த்து பெண்கள் போராட்டம்
Apr 11, 2017
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவ்வகையில் இன்று திருப்பூர் அருகே சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.
இன்று(11.04.17) காலை முதலே நடைபெற்ற இப்போராட்டத்தில் பெண்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். டாஸ்மாக் கடை மூடப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
உறுதி அளித்தும் மக்கள் கலைந்து செல்லாததால் காவல் அதிகாரிகள் தடியடி நடத்தினர். இத்தாக்குதலுக்கு கண்டனங்கள் பல எழுந்துள்ளன.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “மதுக்கடையை எதிர்த்து பெண்கள் போராட்டம்”