மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மதுசூதனன் அறிவிப்பு: சசிகலா, டி.டி.வி.தினகரன், வெங்கடேஷ் ஆகியோர் அதிமுக-விலிருந்து நீக்கம்



Feb 17, 2017

அதிமுக-வின் அவைத் தலைவராக இருந்த மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம் அணியில் சேர்ந்தார். இதையடுத்து பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா அதிமுக-விலிருந்து மதுசூதனனை நீக்கினார்.

Siragu madhusudhanan

மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து சிறைக்கு செல்லும் முன் ஜெயலலிதா-வால் நீக்கப்பட்ட டி.டி.வி தினகரன் மற்றும் வெங்கடேஷ் போன்றோரை கட்சியில் இணைத்து, டி.டி.வி தினகரனுக்கு துணை பொதுச்செயலாளர் பதவியும் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் அதிமுக-வின் அவைத் தலைவராக இருந்த மதுசூதனன், சசிகலா, டி.டி.வி. தினகரன், வெங்கடேஷ் ஆகியோர் அதிமுக- விலிருந்து நீக்கியதாக அறிவித்துள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தி வருவதால் இவர்கள் நீக்கப்பட்டதாக அறிவித்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மதுசூதனன் அறிவிப்பு: சசிகலா, டி.டி.வி.தினகரன், வெங்கடேஷ் ஆகியோர் அதிமுக-விலிருந்து நீக்கம்”

அதிகம் படித்தது