மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மதுரை: மதுக்கடையை அடித்து நொறுக்கிய கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்



Apr 18, 2017

மதுரை பொய்கைக்கரைப்பட்டியில் மதுக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மதுக்கடை பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டுள்ளது. எனவே மதுக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதனை அகற்றக்கோரி மாவட்ட நிர்வாகம் உட்பட அனைத்து அதிகாரிகளிடமும் மனு கொடுக்கப்பட்டது.

Siragu tasmac

அதையும் மீறி மதுக்கடை அமைக்கப்பட்டது. அதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மதுரை பொய்கைக்கரைப்பட்டியில் கல்லூரி மற்றும் மருத்துவமனை அருகே உள்ள மதுக்கடையை அடித்து நொறுக்கினர்.

மேலும் மதுக்கடை ஊழியர்களையும் தாக்கினர். மதுக்கடையை மூட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த மதுக்கடைக்கு சீல் வைக்கும் வரை இந்தப் போராட்டம் நடைபெறும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மதுரை: மதுக்கடையை அடித்து நொறுக்கிய கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்”

அதிகம் படித்தது