மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் அபராதம்
Apr 11, 2017
மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவில் புதிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட சட்டதிருத்த மசோதா நேற்று(10.04.17)லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இதில் இருபதுக்கும் மேற்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.
புதிய மோட்டார் வாகன விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கு முன்பு இரண்டாயிரமாக இருந்தது.
ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டுவோருக்கு ஆயிரம் அபராதமும், ஆம்புலன்ஸ்-க்கு (அவசர ஊர்திகளுக்கு) வழி விடாமல் சென்றால் பத்தாயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ஐநூறும், அதிவேகமாக வாகனம் ஒட்டுவோருக்கு இரண்டாயிரம் ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இம்மசோதாவில் வாகன விபத்தில் பலியானோருக்கு பத்து லட்சமும், காயமடைந்தோருக்கு ஐந்து லட்சமும் காப்பீட்டு நிறுவனம் வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.




கருத்துக்கள் பதிவாகவில்லை- “மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் அபராதம்”