மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மத்திய அமைச்சரவையில் ஜி.எஸ்.டி மசோதாவுக்கு ஒப்புதல்



Mar 20, 2017

சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி மசோதாவை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வந்தது. ஜி.எஸ்.டி வரியை ஜூலை 1 முதல் நாடு முழுவதும் அமல்படுத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Siragu GST-Bill

கடந்த வாரம் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஜி.எஸ்.டி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஜி.எஸ்.டி குறித்து ஆலோசிப்பதற்கு இன்று(20.03.17) பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூடியது. அதில் ஜி.எஸ்.டி தொடர்பான இரண்டு முக்கிய மசோதாக்கள் மற்றும் நான்கு துணை மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய ஜி.எஸ்.டி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி, இழப்பீடு சட்டம், யூனியன் பிரதேசங்களுக்கான ஜி.எஸ்.டி போன்ற நான்கு துணை மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இன்று(20.03.17) நாடாளுமன்றத்தில் இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்திய அமைச்சரவையில் ஜி.எஸ்.டி மசோதாவுக்கு ஒப்புதல்”

அதிகம் படித்தது