மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மத்திய அரசின் “உதய்” மின் திட்டத்தில் இணைந்தது தமிழகம்



Jan 9, 2017

2015ம்ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில் மாநிலங்களின் மின் விநியோக திறனை மேம்படுத்துதல், மின் விநியோக வட்டி மற்றும் மின் உற்பத்தி விலையைக் குறைக்கவும், மின் விநியோக அமைப்புகளில் நிதி ஒழுக்கம் மற்றும் மேலாண்மையை நிலை நாட்டவும் “உதய்”(உஜ்வால் டிஸ்காம் அஷ்யூரன்ஸ்) திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

siragu-power_supply

இத்திட்டத்தில் இருபது மாநிலங்கள் இணைந்த நிலையில் 21 ஆவது மாநிலமாக தமிழகம் இணைதுள்ளது. முதலில் எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழக அரசு இணைய முடிவு செய்து இணைந்துள்ளது.

இத்திட்டத்தில் மின் வாரியங்களின் மொத்த கடனில் 75 சதவிகிதத்தை மாநில அரசு செலுத்தவேண்டும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணத்தை மாற்றி அமைத்தல்போன்ற அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனவரி 9ம் தேதி டெல்லியில் கையெழுத்தாக உள்ளது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று (ஜனவரி 9ம் தேதி) கையெழுத்தானது. மத்திய இணை அமைச்சர் பியூஷ் கோயல் முன்னலையில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன் மூலம் ரூ.11,000 கோடி பயன் கிடைக்க உள்ளது என்று அறிவித்துள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்திய அரசின் “உதய்” மின் திட்டத்தில் இணைந்தது தமிழகம்”

அதிகம் படித்தது