மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மத்திய அரசு: ஆதார் அட்டைக்காக மரபணு சோதனை செய்யலாம்



May 2, 2017

வங்கிக்கணக்கு மற்றும் பான் துவங்குவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் என்று மத்திய அரசு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இவ்வழக்கின் இன்றைய விசாரணையில் இன்று மத்திய அரசு வாதம் செய்தது.

Siragu -aadhaar

போலி பான் கார்டுகள் பயன்பாட்டுக்கு வந்ததால், கைரேகை, கண் விழித்திரை உள்ளிட்டவற்றை பான்கார்டில் புகுத்தி பான் பிளஸ் என்று புதியதாக வெளியிட மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.

இவ்வாறு செய்வதில் போலியாக தயார் செய்ய இயலாது. மேலும் பிற நாடுகளில் அடையாள அட்டை வழங்க மரபணு சோதனை நடத்துகிறது. அதன் அடிப்படையில் இந்தியாவிலும் ஆதார் அட்டைக்காக மரபணு சோதனை செய்யலாம் என்று மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தஹி தமது வாதத்தில் கூறியுள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்திய அரசு: ஆதார் அட்டைக்காக மரபணு சோதனை செய்யலாம்”

அதிகம் படித்தது