மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மத்திய அரசு: கட்டாய விடுமுறையில் பொங்கல் பண்டிகை



Jan 10, 2017

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், மத்திய அரசு கட்டாய விடுமுறை பட்டியலிலிருந்து பொங்கல் பண்டிகை நீக்கப்பட்டது என்று அறிவித்தது. உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்று விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் எனவும், உயர் அதிகாரிகள் நினைத்தால் விடுமுறையை ரத்து செய்யலாம் எனவும் அறிவித்தது.

siragu-pongal-festival2

இதனிடையே இந்த அறிவிப்பிற்கு தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறையில் இணைக்க வேண்டும் என்று கடிதம் எழுதினார்.

இந்நிலையில் கட்டாய விடுமுறையில் பொங்கல் பண்டிகையை சேர்த்துள்ளது மத்திய அரசு. தசரா பண்டிகைக்குப் பதிலாக பொங்கல் பண்டிகையை கட்டாய விடுமுறை பட்டியில் சேர்த்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்திய அரசு: கட்டாய விடுமுறையில் பொங்கல் பண்டிகை”

அதிகம் படித்தது