மத்திய அரசு: பயன்பாட்டில் உள்ள மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு
Mar 25, 2017
மொபைல் போன் வைத்திருப்பவர்களிடம், அவர்களது ஆதார் எண் மற்றும் கே.ஒய்.சி படிவம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
இதனை அடுத்து பிரதமர் அலுவலக அதிகாரிகள் மற்றும் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தினர். அதன்படி புதிய மொபைல் போன் மற்றும் டெலிபோன் இணைப்பு பெறுவோர், தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு தொலைதொடர்பு துறை அலுவலகங்கள் அனுப்பிய சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
மேலும் பயன்பாட்டில் உள்ள மொபைல் போன்களுக்கும் இது பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. அவ்வாறு ஆதார் எண்ணை வழங்காதபட்சத்தில் 2018 பிப்ரவரி 6க்குப் பின் மொபைல் இணைப்பு துண்டிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்திய அரசு: பயன்பாட்டில் உள்ள மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு”