மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மத்திய அரசு: மக்களின் சந்தேகங்களை தீர்த்த பின் ஹைட்ரோகார்பன் திட்டம்



Mar 27, 2017

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் அப்பகுதி மக்கள் 22 நாட்களாக போராட்டம் நடத்தினர்.

Siragu-neduvaasal1

மக்களின் அனுமதியின்றி இத்திட்டம் செயல்படாது என்று மத்திய மாநில அரசுகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இப்போராட்டம் கடந்த மாதம் 9ம் தேதி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த மாதம் 10ம் தேதி முதல் நெடுவாசல் அருகே உள்ள வடகாடு மற்றும் நலாண்டார்கொல்லை கிராமத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வந்தது. மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதில் நேற்று முன்தினம்(25.03.17)இப்போராட்டத்தைக் கைவிட்டனர்.

இந்நிலையில் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தத்தில் இன்று(27.03.17) கையெழுத்தாக இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து மக்களின் சந்தேகங்களை தீர்த்த பின்னரே ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்திய அரசு: மக்களின் சந்தேகங்களை தீர்த்த பின் ஹைட்ரோகார்பன் திட்டம்”

அதிகம் படித்தது