மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மத்திய நிதியமைச்சகம் எச்சரிக்கை: கறுப்பு பணத்தை மாற்றுவதற்கு உதவி செய்தால் அபராதம் விதிக்கப்படும்



Nov 18, 2016

கறுப்பு பணத்தை அழிப்பதற்காக பழைய 500,1000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற்றது மத்திய அரசு. வங்கிகளில் இந்நோட்டுகளை டிசம்பர் 30வரை மாற்றலாம் என்று அறிவிக்கப்பட்டது. இது தவிர வங்கிகளில் இரண்டரை லட்சம் வரை டெபாசிட் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

siragu-central-salary

மேலும் கறுப்பு பணம் வைத்திருப்போர் வங்கிகளில் டெபாசிட் செய்தால் வருமான வரியுடன் 200 சதவீதம் அபராதமும் விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக கறுப்பு பணம் வைத்திருப்போர் மற்றவர் வங்கிக்கணக்கில் செலுத்தி அதை வெள்ளை பணமாக மாற்றுகின்றனர். இதற்கு வங்கிக்கணக்கு வைத்திருப்போர் உதவுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

வங்கிக் கணக்கு வைத்திருப்போர் தமது வங்கிக்கணக்கில் வேறொருவர் பணம் செலுத்துவதற்கு தாங்கள் உதவி செய்தால் தங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும், கறுப்பு பணத்தை அழிக்க மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு மக்கள் அனைவரும் உதவி செய்ய வேண்டும், இல்லையென்றால் இத்திட்டம் வெற்றிபெறாது என்று மத்திய நிதியமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்திய நிதியமைச்சகம் எச்சரிக்கை: கறுப்பு பணத்தை மாற்றுவதற்கு உதவி செய்தால் அபராதம் விதிக்கப்படும்”

அதிகம் படித்தது