மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மத்திய பட்ஜெட் 2017: ஏழைகளுக்கு ஒரு கோடி வீடுகள்



Feb 1, 2017

2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி.

siragu-lok-sabha

ஏழைகளுக்கு 1கோடி வீடுகள் 2019ம் ஆண்டிற்குள் கட்டித்தரப்படும், 2018 மே மாதத்திற்குள் மின் வசதி அனைத்து கிராமங்களுக்கும் ஏற்படுத்தித் தரப்படும். பிராண்ட் பேண்ட் வசதியை 1,50,000 கிராமங்களுக்கு அளிப்பதற்கு ரூ.10,000 கோடி ஒதுக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ரூ.48,000 கோடி ஒதுக்கீடு, மேலும் கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ.1,87,233 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

ஆதார் கார்டுடன் இணைந்த சுகாதார திட்டத்தை மூத்த குடிமக்களுக்காக கொண்டுவரப்பட உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையை குஜராத் மற்றும் ஜார்கண்டில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் விவசாயத்துறைக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு வருமானமாக இரண்டரை லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை பெறுபவர்கள் மீது விதிக்கப்படும் பத்து சதவிகித வரி, ஐந்து சதவிகிதமாகக் குறைக்கப்படும். மேலும் வருடத்திற்கு 50கோடிக்கும் குறைவாக வர்த்தகம் செய்யும் சிறு வணிகர்களுக்கான வரியிலிருந்து ஐந்து சதவிகிதம் குறைக்கப்படும் என்று இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்திய பட்ஜெட் 2017: ஏழைகளுக்கு ஒரு கோடி வீடுகள்”

அதிகம் படித்தது