மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கருணாநிதி தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்



Dec 8, 2016

நீர்ச்சத்து, ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் டிசம்பர் 1ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

siragu-karunanidhi

ஒரு வாரகாலம் மருத்துவர்கள் அளித்த சிகிச்சையால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று மாலை திமுக பொருளாளர் ஸ்டாலின், தயாநிதிமாறன், துரை முருகன் உள்ளிட்டோர் கருணாநிதியை மருத்துவமனயிலிருந்து அவரது கோபாலபுரம் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து இன்று சென்னை கோபாலபுர இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதி கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதில் திமுக கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், மூத்த நிர்வாகிகள் ராசா, ஏ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கருணாநிதி தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்”

அதிகம் படித்தது