மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மருத்துவ மாணவர்கள் 50% இடஒதுக்கீடு கோரி போராட்டம்



May 3, 2017

15 நாட்களாக மருத்துவ மாணவர்கள், 50 சதவீத இடஒதுக்கீடு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நீதிமன்றம் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது, ஆரம்பத்திலிருந்தே இடஒதுக்கீடு கோரி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறோம்.

Siragu-madras-high-court

இதற்கு நாடாளுமன்றத்தில் ஒரு நிரந்தர சட்டம் இயற்ற வேண்டும். அதுவே நிலையான தீர்வாக இருக்கும். தமிழக அரசு, மத்திய அரசை வலியுறுத்தி அவசர சட்டத்தைக் கொண்டு வரவேண்டும்.

அவசர சட்டம் நிறைவேற்றும் வரை மருத்துவ மாணவர்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் தொடரும் என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத் தலைவர் மருத்துவர் ரவீந்திரநாத் கூறியுள்ளார். அனைத்து மருத்துவ சங்கங்களும் இணைந்து போராட அழைப்பு விடுத்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மருத்துவ மாணவர்கள் 50% இடஒதுக்கீடு கோரி போராட்டம்”

அதிகம் படித்தது