மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மவுலிவாக்கத்தின் 11 மாடிக்கட்டடம் இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு



Nov 1, 2016

சென்னை போரூரை அடுத்துள்ள மவுலிவாக்கத்தில் இரண்டு 11 மாடிக்கட்டடம் கட்டப்பட்டிருந்தது. அதில் ஒரு கட்டடம் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் 28ந்தேதி திடீரென இடிந்து விழுந்தது. அதில் 61 தொழிலாளர்கள் உயிரிழந்தனர், 27 பேர் பலத்த காயமடைந்தனர்.

siragu-moullivaakkam-building

இந்நிலையில் இடிந்த கட்டடத்திற்கு அருகாமையில் உள்ள மற்றொரு 11 மாடிக்கட்டடத்தை இடிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இதன் தொடர்பாக நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் அடிப்படையில் மற்றொரு கட்டடத்தையும் இடிக்கக்கோரி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் பெயரில் நாளை (02.11.2016) இடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனால் அக்கட்டடத்தைச் சுற்றியுள்ள 100 மீட்டர் தூரத்தில் உள்ளோரை பாதுக்காப்பான இடத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கட்டடம் இடிக்கப்படுவதால் மவுலிவாக்கத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை விடப்பட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மவுலிவாக்கத்தின் 11 மாடிக்கட்டடம் இடிப்பு: தமிழக அரசு அறிவிப்பு”

அதிகம் படித்தது