மாநில தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தகவல்: மே 15க்குள் தமிழக உள்ளாட்சித் தேர்தல்
Feb 20, 2017
தமிழகத்தில்உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளின்பதவிக்காலம் சென்ற வருடம் அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து உள்ளாட்சிஅமைப்புகளுக்கு அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்றுதேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
வேட்புமனு தாக்கல்செய்யப்பட்டதில் இட ஒதுக்கீடு பின்பற்றவில்லை என்று திமுக சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரணை செய்த நீதிபதிஇவ்வழக்கை ரத்து செய்தது மட்டுமல்லாது, பஞ்சாயத்து சட்ட விதிகளைப் பின்பற்றிபுதியதாக தேர்தல் அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என்றும், உள்ளாட்சித்தேர்தலை டிசம்பர் 31க்குள் நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று(20.02.17) விசாரணைக்கு வந்தது. இதில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாநில தேர்தல் ஆணையத்திடம் கேள்விகள் எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மாநில தேர்தல் அதிகாரிகள் உள்ளாட்சித் தேர்தலை மே 15 க்குள் நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
உத்தேச தேதி தேவையில்லை எனவும், சரியான தேதியை அறிவிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “மாநில தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் தகவல்: மே 15க்குள் தமிழக உள்ளாட்சித் தேர்தல்”