மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு மனுவில் பிப்., 8ல் விசாரணை



Feb 3, 2017

டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. நேற்று இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்டோரை விடுதலை செய்து தீர்ப்பளித்ததுடன், வழக்கில் முடக்கப்பட்ட சொத்துக்களையும் விடுவித்தார் நீதிபதி ஷைனி.

Siragu maran-brothers

இதனையடுத்து இவ்வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு தொடர்ந்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வந்த நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் மாறன் சகோதரர்கள் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு செய்தனர்.

இவ்வழக்கின் மீது இன்று 2 மணியளவில் விசாரணை நடைபெற்றது. விசாரனையின்போது, உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யாமல் உச்சநீதிமன்றத்தில் செய்வதன் காரணம் கேட்டறிந்து, விரிவான விளக்கத்தை புதன் கிழமை கூறுமாறு இவ்வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு மனுவில் பிப்., 8ல் விசாரணை”

அதிகம் படித்தது