மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மீண்டும் தொடர்கிறது நெடுவாசல் போராட்டம்



Mar 20, 2017

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து நெடுவாசலில் 22 நாட்கள் போராட்டம் நடைபெற்றது.

Siragu-neduvasal2

மாநில மற்றும் மத்திய அரசின் வலியுறுத்தலினால் நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. ஆனால் அதே மாவட்டத்தில் உள்ள வடகாடு மற்றும் நல்லாண்டார்கொல்லை போன்ற பகுதிகளில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை முற்றிலும் கைவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தனர் நெடுவாசல் போராட்டக் குழுவினர். இந்நிலையில் இன்று(20.03.17) கூடிய லோக்சபாவில், நெடுவாசலில் நடைபெற்ற போராட்டத்தையும், அத்திட்டத்தால் ஏற்படும் பாதிப்பையும் எம்.பி பி.ஆர். சுந்தரம் தெரிவித்தார்.

இதற்கு, நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தால் எந்த பாதிப்பும் நிகழாது, விவசாயம் பாதிக்காது, சுற்றுச்சூழல் பாதிக்காது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதான் பதில் கூறியுள்ளார். மேலும் நாளை மறுநாள் விவசாயிகளை இது குறித்து சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இது விவசாயிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மாநில அரசுகள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று உறுதி அளித்ததால்தான் போராட்டத்தைக் கைவிட்டோம். ஆனால் லோக்சபாவில் பேசியதை அடுத்து முன்பு நடைபெற்ற நெடுவாசல் போராட்டத்தை விட தற்போது ஆரம்பிக்க உள்ள போராட்டம் தீவிரமாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மீண்டும் தொடர்கிறது நெடுவாசல் போராட்டம்”

அதிகம் படித்தது