மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முதல்வர் அறிவிப்பு: விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் ரூ.2247 கோடி



Feb 21, 2017

தமிழ்நாட்டில் பருவமழை பொய்த்ததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடும் வறட்சி ஏற்பட்டது. எனவே தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

Siragu edappadi-palanisamy2

இதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் நேரடி பயிர் ஆய்வு செய்ய நெறிமுறைகள் வகுக்கப்பட்டு அதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

கள ஆய்வின் முடிவில் தமிழகத்தில் 13,305 கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதிலிருந்து 87 சதவீதம் நிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவித்தொகையாக ரூ.2247 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. மாநில பேரிடர் நிவாரண நெறிமுறைகளின்படி பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு மற்றும் இதர பாசன பயிர்களுக்கும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 5465ம், மானாவாரி பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 3000ம், நீண்டகால பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.7287ம், பட்டுப்புழு வளர்புக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 2428 லிருந்து ரூ.3000 வரை நிவாரண உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முதல்வர் அறிவிப்பு: விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் ரூ.2247 கோடி”

அதிகம் படித்தது