மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: தமிழக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன்



Feb 8, 2017

முதல்வர் ஓ.பி.எஸ் நேற்று ஜெயலலிதா நினைவிடத்தில் செய்தியாளர்களிடம் பேசியதை அடுத்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேட்டிக்கு பதில் அளிக்கும் விதமாக சசிகலா, அதிமுக கட்சி ஒற்றுமையுடன் உள்ளது என்றும் ஓ.பி.எஸ் தவறான கருத்துகளை பரப்பி வருகிறார் என்றும் கூறியுள்ளார். மேலும் பொருளாளர் பதவியிலிருந்து அவரை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Siragu-panneerselvam2

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.

தமிழக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன், சூழல் அமைந்தால் ராஜினாமாவை வாபஸ் பெறுவேன் என்று கூறியுள்ளார்.

அதிமுக-விற்கு ஒரு பொழுதும் துரோகம் செய்யவில்லை, பா.ஜ.க என்னை இயக்குவதாக சொல்வது அப்பட்டமான பொய் என்றும், ஜெ., மரணம் பற்றி உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜெயலலிதா அண்ணன் மகள் என்ற முறையில் தீபாவை மதிக்கிறேன். என்னுடன் சேர்ந்து செயல்பட அழைப்பு விடுக்கிறேன் என்று கூறியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: தமிழக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன்”

அதிகம் படித்தது