மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் ஆளுநர்



Feb 6, 2017

ஜெயலலிதா மறைவிற்குப் பின் ஓ. பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அதன்பின் ஒரு வாரத்திலேயே சசிகலா அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.

Siragu ops

இந்நிலையில் சட்டசபை குழு தலைவராக சசிகலாவை ஒருமனதாக தேர்வு செய்தனர் அதிமுக எம்.எல்.ஏ-க்கள். இம்முடிவை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக்கொண்டதையடுத்து, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னருக்கு அனுப்பி வைத்தார். அக்கடிதத்தில் தனது சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டிருந்தார். கவர்னர் வித்யாசாகர் ராவ் இக்கடிதத்தை ஏற்றுக்கொண்டு, சசிகலா முதல்வர் பொறுப்பேற்கும் வரை ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக நீடிக்கலாம் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் ஆளுநர்”

அதிகம் படித்தது